பள்ளிக்குடா புனித யூதாததேயு ஆலயம்

Posted on

by

[6:04 PM, 4/7/2026] Lurismary: இவ்வாலயமானது 1960 ஆம் ஆண்டுகளில் குருநகரிலிருந்து கடல்தொழிலுக்காக பள்ளிக்குடாவிற்கு வந்த மீனவர்களால் கட்டப்பட்டது.

இவ்வாலயம் கடற்கரைக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், உள்நாட்டு யுத்தங்களின்போது இலங்கை கடற்படை முகாமின் கட்டுப்பாட்டு வலயத்தினுள்ளிருந்தது. இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சு மற்றும் இராணுவத்தினரின்ஷெல்வீச்சு தாக்குதல்களால் சேதமடைந்தது.

பள்ளிக்குடாவில் அமைந்திருக்கும் ஏனைய கத்தோலிக்க ஆலயங்கள் உருவாகுவதற்கு முன்பதாக பள்ளிக்குடா புனித யூதா ததேயு ஆலயத்திலேயே ஞாயிறு திருப்பலிகள் முதலான ஏனைய அருட் சாதனங்கள் வழங்ப்பட்டுவந்தது.

பள்ளிகுடாவில் மீன்பிடித் தொழிலுக்காக யாழ்ப்பாணத்தின் குருநகர் நாவந்துறை முதலான இடங்களில் இருந்து குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு திருப்பலிகள் மற்றும் அருட்சாதனங்களை நிறைவே…
[6:04 PM, 4/7/2026] Lurismary: புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பள்ளிக்குடா

இவ்வாலயமானது பள்ளிக்குடா கடற்கரையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை, புனித நீக்கிலார் ஆலயத்தைச் சேர்ந்த மீன் பிடி தொழிலுக்காக பள்ளிக்குடாப் பகுதியில் குடியேறிய கத்தோலிக்கர்களாலே புனித பதுவை அந்தோனியார் ஆலயமாக 1979 ம் ஆண்டுகளில் வலைப்பாட்டுப் பங்குத்தந்தை அருட்தந்தை கோன்சால்வே அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்பணியாளரின் பணி காலத்தில் உருவாக்கப்பட்டது.

அக்காலப் பகுதியில் வலைப்பாட்டுப் பங்கிற்கு உட்பட்டதாக பூநகரிப் பங்கின் ஆலயங்கள் அமைந்திருந்தன. அப்போது மாதத்தின் ஒரு ஞாயிறு மாத்திரம் திருப்பலி இடம் பெற்று வந்தது. 12ம் திகதி வைகாசி மாதம் 2000 ஆம் ஆண்டில் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சு விமானம் தாக்குதலை மேற்கொண்டபோது ஆலயத்திற்கு முன்பாக இருந்த ஆலயத்திற்கு முன்பாக இருந்த ஆலயத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டும், 12 பேர் படுகாயம் அடைந்து அங்கவீனமாயினர். அதனால் ஆலயம் மிக மோசமாக பாதிப்படைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது.

இந்நிலையில் 2003இல் முழங்காவில், ஜெயாபுரத்தில் இருந்து பூநகரிப் பங்கை பரிபாலித்த அப்போதைய பங்குத் தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அடிகளார் பள்ளிகுடவிலே குடியேறியுள்ள கத்தோலிக்கர்களுக்கு ஒரு ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக பள்ளிக்குடா மணக்காடு என்னுமிடத்தில் அதாவது தற்போது புனித பதுவை அந்தோனியார் ஆலயம் உள்ள ஐந்து ஏக்கர் அரச காணியை பள்ளிக்குடாவைச் சேர்ந்த இந்து சமயத்தவரான திரு. மகேஸ்வரன் என்பவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாவுக்கு பெற்றுக் கொண்டார். அப்போதைய யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராகிய தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளிடமிருந்து 50000 ரூபாய்களையும் மீதி 50,000 ரூபாவை அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் அடிகளிடமிருந்தும், அப்பகுதி பங்கு மக்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே புனித அந்தோனியார் ஆலயம் கடற்கரையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த காரணத்தால், தற்போது பள்ளிக்குடா மணல்காட்டில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் இருக்கும் இடத்தில் புனித சவேரியார் ஆலயத்தை நிறுவ தீர்மானித்து, அதற்கான ஆரம்பகட்ட வேலைகளையும் முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் அடிகளார் பூநகரிப் பங்கை பொறுப்பேற்றுக் கொண்டார். அவ்வேளையில் இலங்கை புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து சேதமடைந்த கடற்கரையில் இருந்த புனித பதுவை அந்தோனியார் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு அவ் ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்ப முற்பட்ட வேளை, பூநகரி பிரதேச செயலரிடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்கவில்லை, ஏனெனில் அரசாங்க சட்ட ஒழுங்கின்படி கடற்கரையில் இருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட இடத்தில் கட்டடங்கள் அமைக்க அனுமதி இல்லை. எனவே அந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிக்குடா மணற்காட்டில் தற்போதுள்ள புனித அந்தோனியார் ஆலயத்தை புனித சவேரியார் ஆலயமாக அமைக்க முற்பட்ட வேளையில், பூநகரி பிரதேச செயலாரான திரு சிறிஸ்கந்தராஜா என்பவரிடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஏனெனில் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெயரில் பெறப்பட்ட புனரமைப்புக்கான நிதி புனித அந்தோனியார் ஆலயத்தைப் புனரமைக்கவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டின் காரணமாக தற்போது உள்ள இடத்தில் அருட்தந்தை லீயோ ஆம்ஸ்ரோங் அவர்களின் முயற்சியால் பள்ளிக்குடா மணல் காட்டில் உள்ள புனித பதுவை அந்தோனியார் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

அதேவேளையில் கடற்கரையில் சேதமடைந்திருந்த பழைய புனித பதுவை அந்தோனியார் ஆலயம் தொடர்ந்தும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜே. அ. அருள்தாசன் அடிகளாரின் காலத்தில் அவ்வாலயத்தைச் சேர்ந்த மக்களினுடைய நிதிப் பங்களிப்பினாலும், உடல் உழைப்பினாலும் மீண்டும் அதே இடத்தில் அவ் ஆலயம் புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டு புனித வனத்து அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒரே இடத்தில் ஒரே பெயரில் இரண்டு புனித பதுவை அந்தோனியார் ஆலயங்கள் இருப்பது பொருத்தம் அற்றது என்ற காரணத்தினால் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டு அவ்வாலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

புனித வனத்து அந்தோனியார் ஆலயத் திருவிழாவானது ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அன்று கொடியேற்றமும் இரண்டு நாள் ஆயத்தங்களின் பின்னர் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான பக்தர்களும் பூநகரி மற்றும் பள்ளிக்குடாவைச் சேர்ந்த பங்கு மக்களும் இவ்விழாவில் பங்குபற்றுகின்றனர்.

தகவல்:- அருட்தந்தை J. A அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *