கிளாலி புனித அந்தோனியார் ஆலயம், பச்சிலைப்பள்ளி

Posted on

by

kilali

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிளாலி எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் ‘தலையார்’ எனும் சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். இங்கு அமைந்திருந்த பழமையான ஆலயத்தின் மரத் தூணில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இவ்வாலயம் 1827 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாலயம் அமைக்கப்படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதுமட்டுவாளுக்கு அருகிலுள்ள ஒட்டுவெளி எனும் இடத்திலிருந்து சில குடும்பங்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் தமது ஒட்டுவெளி எனும் கிராமத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தைக் கொண்டிருந்தனர். கொலரா நோய் அக் கிராமத்தில் பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியதால், அவர்கள் அக் கிராமத்தை விட்டு வெளியேறி இங்கு வந்து சேர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *