கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கௌதாரிமுனை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அழகுற அமைந்துள்ளது.

இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடர்பான தெளிவான தகவல்களை அறிய முடியவில்லை. ஆயினும் போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்கிடைப்பட்ட காலத்தில் பூநகரிக்கும் குடா நாட்டிற்குமான போக்குவரத்துத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலத்திலேயே பூநகரிப் பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அந்த வகையில் பூநகரி வாடியடியில் அமைந்துள்ள அடைக்கல அன்னை ஆலயம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே கௌதாரிமுனை அந்தோனியார் ஆலயமும் அமைக்கப்பட்டிருக்கலாம் என முன்னோர்களால் கூறப்படுகின்றது. 1913 காலப்பகுதியில் பாஷையூரிலிருந்து மண்ணித்தலையில் குடியேற்றப்பட்ட மக்கள் குழுமங்களில் சிலர் காலப்போக்கில் கௌதாரிமுனையில்…
[9:23 AM, 3/31/2026] Lurismary: கிளாலி புனித மரியாள் ஆலயம், பச்சிலைப்பள்ளி

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிளாலி எனும் கிராமத்தில் புனித மரியன்னையின் ஆலயம் வானளாவி உயர்ந்து நிற்கின்றது.

இவ்வாலயம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான தெளிவான வரலாற்றுச் சான்றூகள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் கிளாலிப் பகுதியைச் சூழ்ந்துள்ள ஆலயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அங்கு வாழ்ந்த மக்களின் சாதிப் பிரிவினையினால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் என அறிய முடிகின்றது.

அந்த வகையில் இவ்வாலயமும் மண் சுவர்கள், மற்றும் ஒலையினால் கூரை வேயப்பட்ட சிறிய ஆலயமாக வெள்ளாளர் சமுகத்தினரால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். Mgr. செமேரியா காலத்திலிருந்து ஒரு கத்தோலிக்கருக்குச் சொந்தமான காணியில் இவ்வாலயம் அமைந்திருந்ததாக அறியமுடிகின்றது.

அவர் இவ்வாலயத்தை திரு அவையிடம் ஒப்படைப்பதாகக் கூறியிருந்தாலும், அதனை செய்யவில்லை. இவ்வாலயத்தை திரு அவையிடம் ஒப்படைக்க விருப்பமின்றி செயற்பட்டமையால், 1895 இல் அருட்தந்தை ஹிப்போலைற் என்பவர் திரு அவைக்கு சொந்தமான காணியில் புதிய குடிசை ஆலயத்தை அமைத்தார்.

இதனால் பழைய ஆலயத்தின், சொரூபங்கள் போன்ற ஆலயப் பொருட்களை இரவு நேரத்தில் மறைமுகமாக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர். இதனால் அங்கு ஒரு முரண்பாடான நிலை தோன்றி 1898 வரை நீடித்தது. பின்பு பழைய ஆலயத்திற்குரிய பொருட்களை புதிய ஆலயத்திற்கு எடுத்துச் சென்றதன் மூலம் இப் பிரச்சினை முடிவிற்கு வந்தது. பழைய ஆலயத்தின் பழுதடையாத மரப் பொருட்கள் புதிய ஆலயத்தை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில், இவ்வாலயம் 131 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான ஆலயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இவ்வாலயம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

மிருசுவில் பங்கின் துணை ஆலயமாக இயங்கிவரும் இவ்வாலயத் திருவிழா தூய கன்னிமரியாளின் விண்ணேற்புப் பெருவிழா அன்று (ஆவணி 15) சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தகவல்:- ‘XXV Years’ Catholic Progress’ Rev. S. Gnana Prakasar OMI, St. Joseph’s Catholic Press, Jaffna, 1999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *