
D5 பெரியபரந்தன் பாலையடி சித்திவிநாயகர் ஆலயம் 1950ம் ஆண்டு வல்லி இளையவர் என்பவரால் அவர்களின் சொந்த கமத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது. புின்பு 1960ம் ஆண்டு கெங்கீறீட் கல்லினால் கட்டப்பட்ட நித்திய பூசைகள் இடம் பெற்றன. புின்பு 1995ம் ஆண்டளவில் இவ்வாலயத்தை நிர்வகிப்பதற்காக ஓர் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு அதன் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக பிள்ளையாரும் பரிவாரமூர்த்தியாக வைரவரும் குருக்கலாலும் பின்பு ஈசன் ஜயாவும் பூசை செய்து வந்துள்ளார்கள் இவ்வாலயத்தில் நாளாந்தம் நித்திய பூசைகளும் விசேட பூசையாக ஆவணி சதுர்த்தி, மகாசிவராத்திரி, திருவெம்பாவை, சரஸ்வதி பூசை, பிள்ளையார்கதை, போன்ற பூசைகள் இடம் பெற்று வருகின்றன இவ்வாலயம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யாமல் உள்ளதால் யுத்தகாலத்தில் சில பகுதிகள் சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் புனரமைப்பு செய்ய நிர்வாகத்தினர் உபயகாரரும் ஒன்றிணைந்து மக்களின் பங்களிப்படன் புனரமைப்பதற்கு வேலைகள் இடம் பெறுகின்றன இவ்வாலயம் உள்ள காணியை உரிமையாளர்களால் காணி உறுதி எழுதி வழங்கப்பட்டுள்ளது இவ்வாலயத்திற்கு பூசகர் நியமிக்கப்பட்டு மக்களின் பங்களிப்புடன் உரிய கருமங்கள் காலத்திற்கு காலம் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.

Leave a Reply