
இவ் ஆலயம் பழமையான பிரசித்தி மிக்க ஆலயமாக திகழ்ந்தது இவ் ஆலயத்திற்கு அருகில் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்து தீர்த்தக்குளமாக விளங்கியது. இக்குளத்தின் சுற்றுப்புங்களில் பாலைமரம் கூழாமரம் வேம்பு போன்ற பல மரங்கள் விசாலமாகக் காட்சியளித்தன. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் உருவச்சிலை தாமரைக்குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு கணேசானந்தசுவாமிகள் ரங்கூண்மணியம் என அழைக்கப்படும் சுப்பிரமணியம் வே.செல்லையா, ஆகியோர் இதனைப் பொறுப்பேற்று அக்காலப்பகுதியல் இருந்த உதவி அரச அதிபர் அதிபர் உடனடியாக குளத்தின் அருகிலேயே உள்ள ஜந்து ஏக்கர் காணியை ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை குளத்தின் அருகே உள்ள பாலை மரத்தின் கிழ் வைத்து மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி கணேசானந்தா அவர்கள் ஆச்சிரமம் ஒன்றை 7ம் வாய்க்காலில் ஆரம்பித்தார். இந்த ஆலயத்தினை வே. செல்லையா என்பவரிடம் ஒப்படைத்தார் அவரது அயராத முயற்சியால் விவசாய மக்கள் பங்களிப்புடன் இவ்வாலய கட்டட நிர்மாண வேலைகள் வளர்ச்சிடைந்து முழமை பெற்று ஆலய பணிகளை கவனித்து வந்தார். வே. செல்லையா அவர்கள் காலமாகியவுடன் இவ்வாலயம் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது முதல் நிர்வாகத்தலைவராக அவரது மருமகன் வே. பொன்னம்பலம் செயற்பட்டு வந்தார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலத்தில் (போர்ச்சூழல்) இடம் பெயர்வுகள் காரணமாக நிர்வாகத் தெரிவுகள் மூலம் பல தலைவர் மாற்றம் செய்யப்பட்டு இவ் ஆலயம் வழி நடத்தப்பட்டு வந்தது. இவ்வாலயத்தின் மணிக்கோபுரம் விவசாயியான கந்தையா (மீசாலை) என்பரால் அமைத்து கொடுக்கப்பட்டது வைரவர் ஆலயம் குருசாமி என்பரால் அமைத்து கொடுக்கப்பட்டது இவ் ஆலயத்தின் பின்பாகத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க உருவச்சிலை கூழா மரத்தடியில் கீழ் வைக்கப்பட்டு மக்களால் வழிபடும் தன்மை காணப்பட்டது. பின்பு இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு விநாயகர் ஆலயத்தின் முன்பாக தாமரைக்குளத்தின் அருகே சிவன்கோயிலான் மிளிர்ந்து கொண்டிருக்கிறது மிகச் சக்தி வாய்ந்த சிவாலயத்தின் பின்புறத்தில் அகழ்வில் வெளிப்பட்ட சிவலிங்க உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின் ஆலயம் சேதமடைந்த நிலையில் இருந்தபோது இக்கிராம மக்களும் செல்லையா குடும்பத்தினரின் பங்களிப்புடனும் புனரமைக்ப்பட்டு கும்பாபிக்ஷேகம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மீண்டும் புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்து

Leave a Reply