கிருஸ்ணபுரம் திருவருள்மிகு ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் ஆலயம்

Posted on

by

எல்லாம் வல்ல கிருஸ்ணபுரம் ஸ்ரீகமலாம்பிகை சமேத தாயுமானேஸ்வரர் தேவஸ்தானப் பெருமானது அருள் வரலாற்றினை முருகனுக்கு மூத்தவரான பிள்ளையார் அப்பனை நினைத்து அவனருள் துணைக்கொண்டு எழுதுகின்றேன்.
1978ஆம் ஆண்டு தென் இலங்கையில் இனக் கலவரத்தினால் எதிரிகளாக்கப்பட்ட நிலையில் குடிபெயர்ந்து கொடிய காட்டு விலங்குகள் நிறைந்த காடுகளை வெட்டிக் குடிபுகுந்தனர். இவர்கள் ஒற்றையடிப்பாதை வழியே அயல்க் கிராமங்களுக்குப் பயணிக்கும் வேளையில் தற்பொழுது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அக்காலத்தில் புங்கை மரமும் பனை மரமும் இணைந்த நிலையில் காணப்பட்டது. இக்காணியின் அருகாகச் செல்லும்பொழுது இரவு வேளைகளில் சிரிப்பொலி கேட்;பதாக அவ்வழியே செல்பவர்களும் அயல்ப்பகுதியில் குடியிருப்பவர்களும் பேசிக்கொண்டார்கள். காலப்போக்கில் உன்னிப்பாக அவதானித்த பொழுதில் மேற்குறிப்பிட்ட மரங்களின் அருகிருந்தே அச்சிரிப்பொலி வருவதனை உறுதி செய்து கொண்டார்கள்.
இதன்பின்பே இலக்கம் 271ஐ உடைய இக்காணியைச் சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 1987.03.27 ஆம் நாள் அமரர் உயர் திரு.யோகேந்திரன் கிராமசேவகரின் அனுமதியுடன் காணியைத்துப்பரவு செய்து சிவாரயம் ஒன்றை அமைப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டனர். இத்தகைய செயற்பாட்டில் துரைச்சாமி உலகநாதன் , இராமசாமி அழகுசுந்தரம், வடிவேல், வீரையா சுப்ரமணியம,; பெருமாள் நல்லையா, வெள்ளையன் கறுப்பையா, சிதம்பரம் ஆறுமுகம், நாகலிங்கம் செம்புலிங்கம், சுப்பையா சின்னசுப்பையா, கதிர்வேல,; விஜயன், மணியம,; மருதை, இராமசாமி ஆசாரி, ஆண்டி காயாம்பு, அ.பழனிமுத்து ஆகியோர் இணைந்து இரத்தினபுரம் அம்மாவாசி பூசாரி தலைமையில் அடிக்கல் நாட்டி அன்றையதினம் முதல் சின்னசுப்பையா சுப்பையா அவர்களை நித்திய பூசகராகக் கொண்டு பொங்கல் பூசை செய்து வழிபடத்தொடங்கினர்.
இதன்பின்பு முன்பிருந்த சிரிப்பொலி படிப்படியாகக் குறைந்து இல்லாது போய்விட்டது. அதன்பின்னர் மக்கள் எந்தநேரத்திலும் வீதியூடாக சென்றுவரத்தக்க நிலையேற்பட்டது.எம்பெருமான் மிீது நம்பிக்கை வயப்பட்ட மக்கள் ஒன்றுகூடி தாயுமானேஸ்வரப்பெருமானிற்கு நிரந்தரக்கட்டிடம் ஒன்றினை அமைக்க விரும்பியதன் விளைவாக 1987ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞர் திரு.உலகநாதன் அவர்களின் கைவண்ணத்தில் பழனிமுத்து அவர்கள் ஓடுகளை இலவசமாக பெற்று வழங்க 6ù8 அடி கொண்ட சிறியதொரு ஆலயம் அமைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அப்போதைய கிராமசேவகர் திரு.நாதன் ஆலய வளர்ச்சியில் வேலைத்திட்டங்களை நடத்துவதற்கு பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆலயத்திற்குரிய நிர்வாகத்தெரிவு ஒன்று இடம்பெற்றது. இவ் நிர்வாக சபையில் திரு.நா.செம்புலிங்கம் தலைவராகவும், திரு.இ.அழகுசுந்தரம் செயலாளராகவும், திரு.சி.வடிவேல் பொருளாளராகவும், திரு.வெ.கறுப்பையா உபதலைவராகவும், கொண்டு ஒரு சில உறுப்பினருடன் இயங்கியது. காலப்போக்கில் மீண்டும் 1996இல் நிர்வாகம் தெரிகையில் அதே உறுப்பினர்களே தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்தும் செயலாற்றினர். அக்காலப்பகுதியிலும் சின்னசுப்பையா சுப்பையா அவர்களே பூசகராக இருந்துள்ளார். சாதாரண குலதெய்வ வழிபாட்டு முறையில் படையல் வழிபாடுப்பூசை முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
1996ஆம் ஆண்டு ஆடி மாதம் சத்ஜெய குண்டு வெடிக்கையின் காரணமாக கிராம மக்கள் இடப்பெயர்வுக்கு உட்பட்டு 2002ஆம் ஆண்டு மிீண்டும் மீள்குடியேறிய வேளையில் ஆலயத்தின் ¾ பங்கு சீரழிந்த நிலையில் காணப்பட்டது. படிப்படியாக மீண்டும் திருத்தப்பணிகளை ஆரம்பித்தோம். இக்காலத்திலும் சின்னசுப்பையா சுப்பையா அவர்களே பூசகராக இருந்தார். 2002இன் பிற்பகுதியில் சின்னசுப்பையா சுப்பையா இறைத்துவம் அடைந்த பின்பு முருகேசு நடேசன் அவர்கள் பூசகராக இருந்து வந்தார்.
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமய வளர்ச்சியை முன்னெடுக்கும் முகமாக சிவத்திரு.உலகநாத ஐயர் அவர்களின் ஏற்பாட்டுத்தலைமையில் நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. பின் 2005ஆம் ஆண்டு திரு.மூ.சந்திரசேகரம் அவர்களின் நெறிப்படுத்தலில் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் அறநெறிப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன் மகாசிவராத்திரியும் சிறப்பாக நடந்தேறியது. பின் 26.06.2006இல் திரு.தா.நிகேதன் அவர்களால் ஆலயத்திற்குரிய யாப்பு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின் 2008.09.14இல் இடம்பெற்ற இடப்பெயர்வால் மீண்டும் ஆலயச்செயற்பாடுகள் முடக்கமடைந்தது. மீள்குடியேற்றத்தின் பின் ஆலய தர்மபரிபாலன சபையும் மக்களும் ஒன்றுசேர்ந்து ஆலய புனரமைப்பு பணிகளை செய்ததோடு சமயசமூக பணிகளை ஆற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *